Tuesday, November 6, 2012

3 கட்டங்களாக வடக்கு ரயில் வீதியின் நிர்மாணப் பணிகள்

வடக்கையும்,தெற்கையும் இணைக்கும் வடபகுதி ரயில் வீதியின் நிர்மாணப் பணிகள் 185 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. முதல் கட்டம் ஓமந்தையிலிருந்து மாங்குளம் வரையிலும், இரண்டாவது கட்டம் மாங்குளத்திலிருந்து பளை வரையும் மூன்றாவது கட்டம் பளையிலிருந்து, காங்கேசன்துறை வரையிலும் ரயில் வீதி அமைக்கப்படவுள்ளது. வீதியின், நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள இந்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் அதேநேரம், இப்பணிகளை துரிதமாக பூர்த்தி செய்து, காங்கேசன்துறை வரை ரயில் சேவையை மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். வீதியின் வளைவுகள் உள்ள பகுதிகளை குறைப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஓமந்தையிலிருந்து பளை வரை, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு, இதன்மூலம் முடியுமென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

1 comments :

Anonymous ,  November 6, 2012 at 7:37 PM  

Not like the colonial period double track system and shuttle services are very essential for the commuters,
specially for the workers who travel from KKS to Kilinochchi,vavunia is to be considered,by the government.This the way how the westrn countries make the travel system for the commuters very easy

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com