மத்திய மலையகம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்தது.
தாலமுக்க நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதால் இப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்யலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அடை மழை காரணமாக ஏராளமான ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் 750 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கடந்த 2 தினங்களாக அடை மழை பெய்தது. இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. மலையகத்தின் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டன.
உடவலவ, வெஹரகல, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் மாணிக்க கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளத.
இக் கங்கையின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment