இந்தியாவுடனான 2வது இனிங்சில் இங்கிலாந்து ஆதிக்கம்
அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது இன்னிங்சில் இந்திய சுழற்பந்தில் நிலைகுலைந்து பாலோ ஆன் ஆன இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி தோல்வியிலிருந்து வெளியேற போராடுகின்றது.இங்கிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 521 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியாவின் புஜரா இரட்டை சதமடித்தார். சேஷாவாக்கும் ஒரு சதம் அடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது முதலாவத இனிங்சில் ஆடிய இங்கிலாந்து அணியால் இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஓஜாவின் சுழற்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போனது. 191 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சுருண்டு பாலோ ஆன் ஆனது.
பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, இன்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அதாவது இந்தியாவை விட 10 ஓட்டங்கள் கூடுதலாக பெற்றுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் கூக் 168 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment