Tuesday, November 6, 2012

ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு: 26 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஈராக்கில் 2006-ம் ஆண்டு வன்முறை சம்பவங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக குறைய தொடங்கிய வன்முறை தாக்குதல்கள் மீண்டும் இந்த ஆண்டு தலை தூக்க தொடங்கியுள்ளது.

பொது இடங்களில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் நாள்தோறும் மக்கள் உயிரிழப்பது ஈராக்கில் தற்போது சர்வ சகஜமாகி விட்டது. ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் டஜி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் அருகில் சக்தி வாய்ந்த கார் குண்டு வெடித்தது.

இச்சம்பவத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com