கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 25 கோடி நட்டஈடு வழங்க சண்டே லீடருக்கு நீதிமன்றம் உத்தரவு
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிக்கை பாதுகாப்பு செயலருக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்குமாறு கல்கிஸை நீதவான் நிதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்தே கல்கிஸை நீதவான் பிரியந்த பெர்ணான்டோ இந்த உத்தரவை பிறப்பித்தர்.
யுத்த காலத்தின் போது மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்படட்டது தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் மூலம் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டதாக அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிகா ஜான்ஸ் மற்றும் அப்பத்திரிகைக்கு எதிராக பாதுகாப்பு செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மானநஷ்ட வழக்கின் தீர்ப்பின் போதே இதனை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஆக்கங்களை பிரசுரித்தல் மற்றும் செய்தி வெளியிடுதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் நிரந்தர தடையுத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்தது.
0 comments :
Post a Comment