தமிழக அரசு இலங்கை தமிழர்களுக்கு 25 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
தமிழக அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்காக வீட்டுத் திட்டமொன்றை வழங்க தீர்மானித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளNதூடு இதற்காக தமிழக அரசு, இந்திய ரூபாவில் 25 கோடியை (சுமார் 650 மில்லியன் இலங்கை ரூபாய்) ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களில் தங்கி வாழும் இலங்கை தமிழர்கள் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியினை மேம்படுத்துதல், வீடுகளை பழுதுப்பார்த்தல், சாலைகள் சீரமைத்தல், நூலகக் கட்டடம் கட்டுதல், நியாய விலைக்கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை ஏற்படுத்துதல், சமுதாய கூடங்கள் அமைத்தல், மின்கம்பங்கள் மற்றும் தெருவிளக்கு அமைத்தல், சமையலறை கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்துக் கொடுப்பதற்காக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக, கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள 21 அகதிகள் முகாம்களில் ஒரு வீட்டிற்கு 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீடித்து நிலைக்கக்கூடிய 2500 புதிய வீடுகள் நிர்மானிக்ப்படவுள்ளது.
0 comments :
Post a Comment