23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்த சச்சின் டெண்டுல்கர்
தனது 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் நிறைவு செய்துள்ளார்.
தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கெதிரான கராச்சி டெஸ்டில் நவம்பரில்அறிமுகம் ஆன சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து 223 நாட்களில் சர்வதேச போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் 15 ஓட்டங்கள் எடுத்தார்.
190 டெஸ்ட்டில் 15,533 ஓட்டங்களும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ஓட்டங்களும் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 100 சதம் (டெஸ்ட் 51 + ஒருநாள் போட்டி 49) அடித்து ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையை அடைந்தவர் சச்சின்.
39 வயதான சச்சின் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து தனது சிறப்பான ஆட்டம் மூலம் கோடிகணக்கான ரசிகர்களின் மனதில் நின்றவர். இந்நிலையில் தனது 23 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை சச்சின் டெண்டுல்கர் நிறைவு செய்துள்ளார்.
கிரிக்கெட்டில் அவரது அசாதாரண சேவையை பாராட்டும் விதமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி மேல்-சபை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுருந்ததோடு அண்மையில் அவுஸ்திரேலியாவின் உயரிய விருதையும் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது
0 comments :
Post a Comment