2013 ஆண்டிற்கான பட்ஜெட் ஒரே பார்வையில் . (இரண்டாம் இணைப்பு)
இலங்கை அரசாங்கத்தின் 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுப முகூர்த்த வேளையில் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வரவு செலவுத் திட்டத்தின் முக்கியமான சில அறிவிப்புக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பிரிவு வீட்டுக்கடனுக்கு 1000 மில்லியன்: பொலிஸ் துறைக்கு 950 மில்லியன்
பாதுகாப்பு பிரிவுகளில் பணிபுரியும் நபர்களின் குடும்பங்களுக்கு 3 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் நிவாரண வீட்டுக் கடன் வசதிக்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
பொலிஸ் துறையில் அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்த 950 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
பொலிஸ் கொடுப்பனவு தொடர்பில் சம்பள சபை முன்வைத்த கோரிக்கையை அமல்படுத்தவும் யோசனை
குடிநீர் வசதிக்கு 126 பில்லியன் ஒதுக்கீடு நாடு முழுவதிலும் 580000 பேருக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
உள்நாட்டு பால் மற்றும் பால்மா உற்பத்தியை அதிகரிக்கவென இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளுக்கான வரி மேலும் அதிகரிக்கப்படும். உள்நாட்டு பால் பண்ணையாளர்களின் பால் ஒரு லீட்டர் குறைந்தது 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட வேண்டும்.
ஓட்டப் பந்தயத்திற்கென இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களினதும் இறக்குமதி வரி ரத்து
அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 1500 கொடுப்பனவு வழங்கப்படும்.
நிரந்தர வருமானமில்லாத 65 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 5000 ரூபாய் நன்கொடை வழங்க நடவடிக்கை. இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபான வகைகளுக்கு 25 சதவீத வரி.
பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக மாணவர்களை சேர்ப்பதற்கும் பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதற்கும் சிறந்தவொரு விரிவுரையாளர் சேவையை வழங்குவதற்கும் நடவடிக்கை.
வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்வதை குறைத்து திறன் மிக்க வேலையாட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை.
சுற்றுலா நோக்கங்களுக்காக வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதற்கு தடை
நாட்டில் முறையான சுகாதார சேவையை வழங்கவென் 125 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
இலவசக் கல்வித்துறை அபிவிருத்திக்கென 2013ம் வரவு செலவுத் திட்டத்தில் கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பு
கல்வித்துறைக்கு 306 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மொத்த தேசிய உற்பத்தியில் அது 4.1 வீத ஒதுக்கீடாகும்.
ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வாகனம் கொள்வனவு செய்ய வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. இம்முறை அத்திட்டத்திற்கு மேலும் 200 மில்லியன் ஒதுக்கீடு
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 10-20 வீதம் வரை அதிகரிப்பு
வெளிநாட்டு மதுபான இறக்குமதி தீர்வை வரி 25 சதவீதமாக அதிகரிப்பு
பொருளாதாரம் வளர்ச்சியடையும் மத்தியவங்கி அறிக்கை
இலங்கையின் பொருளாதாரம் 2013 இல் 7.5 சதவீத வளர்ச்சி அடையும் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன் 12.30 மணியளவிலேயே மத்தியவங்கி தனது அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இறை மற்றும் நாணய கொள்கைகள் பொருத்தமானதாக மாற்ற அமைக்கப்படுவதோடு யூரோ வலயத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்படும் நிச்சமயற்ற தன்மை குறைவடைவதனாலும் உலக பொருளாதார மீட்சியும் 2013 இல் நடைபெறும்.
சரியான நாணய, இறை கொள்கையோடு உள்நாட்டு நிரம்பல் நிலைமைகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியன இணைந்து 2013ஆம் ஆண்டில் பண வீக்கத்தை ஒற்றை இலக்க மட்டத்தில் பேணும்.
0 comments :
Post a Comment