Thursday, November 15, 2012

ஆகாஷ் 2 எனும் புதிய வகை உயர் தொழில்நுட்ப டேப்லட்டுக்கள் அறிமுகம்

ஆகாஷ் 2 எனும் புதிய வகை உயர் தொழில்நுட்ப டேப்லட்டுக்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி.

பொறியியல் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டேப்லெட்டுக்களை ரூ.1130 ரூபாய்க்கு மாணவர்கள் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

800x400 பிக்சல் எனும் Screen Resolution, 1 GHz, has 512 MB RAM, a 7 inch capacitive touch screen, மூன்று மணிநேரம் பயன்படுத்தக் கூடிய வகையில் பேட்டரி என பல வசதிகள் இதில் காணப்படுகிறது. IIT பாம்பேய் மற்றும் C-DAC நிறுவனங்களின் துணையுடன் உருவாகப்பட்டுள்ள இந்த ஆகாஷ் 2 டேப்லெட்டுக்களை ரூ.2263 க்கு வாங்கியுள்ள மத்திய அரசு அதன் 50% வீத விலைக்கழிவில் மாணவர்களுக்கு வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக ஒரு இலட்சம் டேப்லெட்டுக்கள் இவ்வாறு விற்கப்படவுள்ளன. அடுத்து வரும் 6 வருடங்களில் 22 கோடி மாணவர்களை இவை சென்றடையும் எனவும், எதிர்வரும் திங்கட்கிழமை 20,000 மாணவர்களுக்கு இவை வழங்கப்படவிருப்பதாகவும் அரசு தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்திய கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும், ஏனைய பிரதேசங்களை போன்று சமமான கல்விமுறையை பெறவேண்டும் என்ற நோக்கிலேயே இந்த டேப்லெட்டுக்கள் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது கல்விமுறையை மாற்றியமைக்கும் கருவி என பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி விளக்கியுள்ளார்.

எனினும் இது இந்திய வணிகசந்தையில் முதலீடு செய்யும் ஏனைய கூகுள், நெக்ஸஸ், ஆப்பிள் டேப்லெட்டுக்களின் விற்பனையை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிமுகம் இடம்பெற்றிருப்பதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அதிகரிக்கும் டேப்லெட் நுகர்வு மாணவர்களிடையே தவறுதலான பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படக் கூடும் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com