2 இலட்சம் டொலர் கடன் மோசடி - 4 தமிழர்கள் மீது வழக்கு!
டொராண்டோவில் வியாபார கடன் மோசடியில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது கனடிய சிறப்பு காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இவர்கள் 2006 - 2007 காலப்பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்து கனடிய வங்கிகளிடம் இருந்து 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக சிறப்பு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் போலியான வியாபார நிலையங்களை உருவாக்கி, அதற்கு தேவையா உபகரணங்களை வாங்குவதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதாகவும் கூறி, போலியான ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து இந்த மோசடியை செய்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் சுரேஷ் பரமலிங்கம் (33), பாலமுருகன் பாலகிருஷ்ணன் (32), பவன் சிவகுருநாதன் (31), ஆனந்தருபன் வையாபுரி (35), சுல்தான் ஜாபர் (44), மட்தேவ் புச்கின்காம் (31) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . இவர்கள் அனைவரும் 60 Queen Street West நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment