15வது ஆளுநர் மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
இலங்கை மாகாண சபை வரலாற்றில் முதல் தடவையாக ஆளுநர் மாநாடு யாழ்ப்பாணத்தில்
இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம், ரில்கோ விருந்தினர் விடுதியில் மாநாடு நடைபெறவுள்ளது. பிரதான அமர்வு, நாளை இடம்பெறவுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆளுநர் மாநாட்டில், 2012 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் மாநாடு, வட மாகாணத்தில் நடாத்தப்படுமென, தீர்மானிக்கப்பட்டது. அதனை தொடாந்து வட மாகாண ஆளுநரினாலும், அவரது உத்தியோகத்தர்களினாலும் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை வட மாகாணம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பான கண்காட்சியொன்று, யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது.
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை கோட்பாட்டுக்கமைய, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியின் வழிகாட்டலில், 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை வட மாகாணம் அடைந்துள்ள அபிவிருத்தி தொடர்பான கண்காட்சியே யாழ். மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.
வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் தலைமையில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் வட மாகாணத்தில் 34 உள்ளுராட்சி சபைகளிலிருந்து 7 பெருந்துறைகளை முன்நிறுத்தி, வட மாகாண கண்காட்சியாக ஷஇம்முறை ஒன்றிணைந்து முன்னோக்கி| எனும் தொனிப்பொருளில் கண்காட்சி இடம்பெற்றது.
உணவு சுகாதாரம், வீடமைப்பு, போக்குவரத்து, கல்வி, மனித வளம் பொது சேவைகள், சமூக சேவை, உட்கட்டமைப்பு வீடமைப்பு போக்குவரத்து, பொது சேவை கைத்தொழில் போன்ற விடயங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும். வட மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர், காட்சிக்கூடங்களை திறந்து வைத்தனர். யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணாராசா உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர். கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment