இலங்கை வங்கியின் கடந்த வருட இலாபம் 15 ஆயிரம் கோடி ரூபா
இலங்கை வங்கி கடந்த வருடம் 15 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அரசாங்கத்திற்கு இலாபமாக ஈட்டி கொடுத்துள்ளது என இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் முதியான்சே தெரிவித்துள்ளார்.இலங்கை வங்கியின் சிறிய நடுத்தர தொழில் முயற்சிவங்கியியல் நிலையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
இலங்கை வங்கிக்கு அதிக லாபம் ஈட்டிக்கொடுக்கும் பிரதேசமாக யாழ்ப்பாணமும் உள்ளது. கடந்த வருடம் இலங்கை வங்கி 15 ஆயிரம் கோடி ரூபா பணத்தை இலாபமாக அரசாங்கத்திற்கு ஈட்டியுள்ளது. இந்நிதியைக் கொண்டு அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுகின்றது என்றார்
இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் பிரதம சந்தைப் படுத்தல் அதிகாரி ஐ.லியனகேஇ பிரதிப் பொது முiகாமையாளர் முத்துலகஇ வடபிராந்திய உதவிப் பொது முகாமையாளர் சுமணசிறிஇ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment