பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குல் : 11 பேர் பலி
ஏவுகணைகள் மூலம் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல்களை இஸ்ரேலும் இஸ்ரேல் மீது காஸாவிலிருந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினரும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர்.
'ஆப்பரேஷன் பில்லார் ஆஃப் டிஃபென்ஸ்' எனப் படும் ஹமாஸ் இயக்கத்தினரின் தாக்குதலில் இதுவரை மொத்தம் 245 ராக்கெட்டுக்கள் இஸ்ரேலின் மீது பாய்ந்துள்ளன.
பதிலுக்கு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் 156 போராளிகளின் தளங்கள் மீது வான்வெளித் தாக்குதலை மேற்கொண்டது. இதில் சிறுவர்கள் உட்பட 13 பாலஸ்தீனியர்கள் பலியானதாகக் கூறப்படுகின்றது. மேலும் ஹமாஸ் இயக்க இராணுவத் தலைவர் அகமட் அல் ஜபரி உம் இன்னும் இரு வீரர்களும் பலியாகியுள்ளனர். இதேவேளை இஸ்ரேலில் 7 பேர் பலியானதாகவும் கூறப்படுகின்றது.
எதிர்வரும் 29 ஆம் திகதி பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் பிரேரணை ஐ.நா சபையில் வாக்கெடுப்புக்கு வருகின்றது. இந்நிலமையில் அதன் மீது வலிந்து தாக்குதலை இஸ்ரேல் ஏற்படுத்துவது மத்திய கிழக்கில் மறுபடியும் அமைதியின்மையைக் கொண்டு வருவதற்கே என உலக நாடுகள் கருதுகின்றன.
இன்னொரு புறம் பாலஸ்தீனத்தின் தன்னிகரற்ற தலைவர் யசீர் அரஃபாத் ஐ பொலோனியம் எனும் நஞ்சை ஊட்டி இஸ்ரேலே கொலை செய்தது எனும் சந்தேகமும் வலுத்து வருவது பாலஸ்தீனியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிபர் பாரக் ஒபாமா அதிபரானதால் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவும் குறைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment