ஒரே நாளில் சிரியாவிலிருந்து 11 ஆயிரம் அகதிகள் வெளியேற்றம்
சிரியாவில் நேற்றிரவு மட்டும் 11 ஆயிரம் பேர் சிரியாவை விட்டு அயல்நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளதாக ஐ.நா. அகதிகள் ஏஜென்சி அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் துருக்கியிலேயே தஞ்சமடைந்திருப்பதாக , ஐ.நா. அகதிகள் ஏஜென்சி செய்தி தொடர்பாளர் ஆட்ரீயன் எட்வர்டுஸ் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.இதனால் ஏற்பட்ட வன்முறை மற்றும் இராணுவத்தின் தாக்குதல்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்.
இதனால் உயிருக்கு பயந்து சிரியாவை விட்டு லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். இவர்கள் அண்டை நாடுகளான துருக்கி, ஜோர்டான், லிபியா, ஈராக் ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.
0 comments :
Post a Comment