இராணுவத்தில் 109 தமிழ் பெண்கள் இணைப்பு
இராணுவத்தில் முதன்முறையாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் இருந் 109 தமிழ் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் இராணுவத்தின் பெண்கள் படையணியின் 6 ஆவது படைப்பிரிவுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வானது கடந்த சினிக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரம் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றதுடன் தகுதியின் அடைப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 109 தமிழ்ப் பெண்களே இவ்வாறு இராணுவத்தினர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழும் இச் செயத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டடுள்ளது.
இராணுவத்தின் பெண்கள் படையணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் பயிற்சி முடிந்ததும் தமிழர் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
1 comments :
தமிழீழம், தாயகம், தனிநாடு, மன்னாக்கட்டி என்று இதுவரைக்கும் ஊளையிட்டு,
கொடிபிடித்து, ஊர்வலம் நடத்தி, மாவீரர் கொண்டாடி, உண்டியல் குலுக்கி, சொத்து சுகம் அனுபவித்துக்கொண்டிருக்கும்
புலம் பெயர் கோடரி காம்புத் தமிழர், தமிழ் மண்ணில், பசி,பட்டினி, உடை,வீடு இல்லாமல் காடுகளில் வாழும் தமிழர்களுக்கு உண்டியல் காசில் ஒரு நேர உணவு மட்டுமல்ல ஒரு சதம் கூட கொடுத்ததில்லை. வெளிநாடுகளில் தமிழீழம் என்று மந்திரம் சொல்லிக்கொண்டு சொத்து சுகம் அனுப்பவிக்கும் தமிழ் புலிப்பினாமிகள், தமிழ் எடுபிடிகள்,
தமிழ் அறிவுக்கொழுந்துகள், தமிழ் வயோதிபர்கள் இவர்களுக்கு இதயம் இல்லையா? மனட்சாட்சி இல்லையா?
தமிழ் மண்ணில், தமிழர்களாலேயே அகதிகளாக, அனாதைகளாக கை விடப்பட்ட தமிழ் மக்கள் இப்படியாவது வறுமை நீங்கி நிம்மதியாக வாழட்டும்.
Post a Comment