ருகுணு பல்கலைக்கழக மாணவிகள் 100 பேர் வயிற்றோட்டத்தினால் பாதிப்பு
வயிற்றோட்டத்தினாலும் வாந்தி போதியினால் பாதிக்கப்பட்ட ருகுணு பல்கலைகழகத்தைச்சேர்ந்த 100 மாணவிகள் சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைகழக விடுதியில் நேற்றிரவு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்தே மாணவிகள் இவ்வாறான அசாதாரண ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஏழுபேர் மாத்தறை வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். ஏனைய மாணவிகள் சிகிச்சை பெற்று விடுதிக்கு திரும்பியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ருகுணு பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
0 comments :
Post a Comment