யாழ்.நாளோடுகளுக்கு எதிராக இராணுவத்தளபதியும் வழக்கு தாக்கல் 100 மில்லியன் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் இரு நாளேடுகளுக்கு எதிராகஇராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இரு நாளேடுகளும் கடந்த ஜுலை 11ம் திகதி வெளியிட்ட செய்தி தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தே இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று இவ் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக தனக்கு இழப்பீடாக இரு நாளேடுகளும் தலா 100 மில்லியன் ரூபாவை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை,கோத்தபாய ராஜபக்ஸவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சண்டே லீடர் பத்திரிகை 250 மில்லியன் ரூபாயை நட்ட ஈடாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment