நாளென்றிற்கு 100 மில்லியன் நட்டத்தில் ஈரான் அரசு
ஈரான் மீது மேற்குல நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையினால் அந்நாட்டுக்கு தினசரி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டமேற்படுவதாக சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.கடந்த வருடம் ஈரான் வெளிநாடுகளுக்கு நாளொன்றுக்கு 2.3 மில்லியன் கச்சா எண்ணெய் பேரல்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 1.3 மில்லியன் பேரல்களையே அதனால் ஏற்றுமதி செய்யமுடிந்துள்ளது.
இதனைக் கருத்தில் கொள்ளும் போது தற்போதைய கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தினசரி சுமார் 109 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயினை ஈரான் நஷ்டமாக இழந்து வருகின்றது.
இதேவேளை இவ்வருவாய் இழப்பானது கணிப்பிடப்பட்டதினை விட அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கே அதனை ஈரான் வழங்குவதால் அந்நாட்டிற்கு அதிக நட்டமேற்படுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
0 comments :
Post a Comment