முறைப்பாடு செய்யச் சென்ற பெண்ணை ஹோட்லுக்கு கூட்டிச் சென்ற OIC கைது.
அண்மையில் புலஸ்திகமை பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றச் செயல்கள் கிளையின் OIC உப பொலிஸ் பரிசோதகர் எஸ். சுகத் சமரதுங்க என்பவர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பெண்ணிடம், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பாலுறவை இலஞ்சமாக கேட்டு, அப்பெண்ணுடன் பாலுறவு கொள்வதற்காக, மின்னேரியாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அந்த பெண்ணைச் சந்திக்க சென்ற போது இலஞ்சத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை இலஞ்சத் திணைக்களத்தினர் கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்க்கப்புலியின் முன் நிறுத்திய போது அவர் அக்டோபர் 25 ம் திகதிவரை சந்தேக நபரை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment