சரத் பொன்சேகாவின் கூட்டத்தில் எவரும் பங்கேற்கக் கூடாது - ஐ.தே.க
சரத் பொன்சேகாவின் தலைமையில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹைட் மைதானத்தில் நடைபெறும் அரசியல் கூட்டத்தில் பங்கேற்பதில்லை எனவும், கட்சி உறுப்பினர்கள் எவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி உத்தரவிட் டுள்ளது.
எனினும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், பொதுவான எதிர்க்கட்சி ஒன்றை அமைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதாக சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் பொதுவான எதிர்க்கட்சியின் கூட்டங்களில் சரத் பொன்சேகா பங்கேற்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment