போலிச் சாமி நித்தியை விரட்டியடிக்கும் கர்நாடக மக்கள்
பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள நித்யானந்தாவை மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்ட தாக மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் அறிவித்ததைத் தொடர்ந்து சில நாட்களாக திருவண்ணா மலையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த நித்யானந்தா, நேற்று இரவு கர்நாடகாவின் ராம்நகரம் மாவட்டம் பிடதியில் உள்ள ஆசிரமத்துக்கு சென்றுள்ளார்.
நித்யானந்தா, கர்நாடகா வந்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து நேற்று இரவு முதல் கர்நாடக கஸ்தூரி கன்னட சங்கம் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலையில் டயர் கொளுத்தியும், நித்யானந்தாவின் படத்துக்கு தீ வைத்தும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்க ஆசிரமத்தை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நித்யானந்தாவை உடனடியாக மாநிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு கன்னட அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
0 comments :
Post a Comment