போலிசாமி நித்தியானந்தா விடும் தமாஷ்க்கு அளவே இல்லையாம்
மதுரை ஆதீன பதவியில் இருந்து நான்விரட்டியக்கப்பட்டேன் என்று, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி யது போல கூறக்கூடாது என முன் னாள் இளைய ஆதீனம் போலிச்சாமி நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் மதுரை ஆதீனம் கையெ ழுத்து போட்டால் அது "விலக்குதல்" என்றும், நான் கையெழுத்து போட்டால் அது "ராஜினாமா" அவ்வளவுதான் இதில் விஷயம் என்று நிருபர்களிடம் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
அட அப்படியானால், அருணகிரிநாதர் உங்களை நீக்குவதாக அறிவிக்கும் முன், நீங்களாகவே ராஜினாமா செய்திருக்கலாமே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "மதுரை இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து என்னை நீக்கிவிட்டனர் என்ற தகவல், நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும்". அப்படி நிலைமை இருக்கும்போது, அவரது அறிவிப்புக்குமுன் நான் எப்படி ராஜினாமா செய்திருக்க முடியும்?' என அப்பாவியாக திருப்பிக் கேட்டார் நித்தி.
அவர் விட்ட அடுத்த தமாஷ், மதுரை ஆதீனத்தில் இருந்து இரண்டொரு நாளில் விலகிவிடலாம் என்று நானே முடிவெடுத்து இருந்தேன். அதற்குள் அருணகிரி நாதர் முந்திக்கொண்டு விட்டார் என்பது.
இந்த போலிசாமி, சிவபெருமானின் அவதாரம் என்று இவரது பக்தர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட சாமிக்கே தெரியாமல் விரட்டியக்கப்படடார் என்றால் அது எப்படி?
0 comments :
Post a Comment