போலி நாணய தாள்கள் தொடர்பில் அவதானம்! எவ்வாறு போலி நாணயங்ளை இனம் காணலாம்
500, 1000, 2000 மற்றும் 5000 ரூபா பெறுமதியான போலி நாணய தாள்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக தகவ ல்களும் முறைப்பாடுகளும் கிடைத்து ள்ளதாகவும், இப்போலி நாணய தாள்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆகவே குறித்த நாணய தாள்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன், குறித்த நாணய தாள்களில் காணப்படும் நீர் இலட்சிணையை வெளிச்சத்தில் காட்டும் போது அதன் பெறுமதி மாறியிருப்பதும், நாணய தாளின் குறுக்கு பக்கங்கள் இரண்டிலும் சிறிய 2 கோடுகள் கரத்தில் உராய்வதையும், அத்துடன் குறித்த நாணய தாள்களில் கறுப்பு நிறத்திலான கோடு ஒன்று காணப்படுவதும், இவை சாதாரண நாணய தாள்களை விட கனதியாக காணப்படுவதும், இப்போலி நாணய தாள்களின் அடையாளங்களாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற சந்தேகத்திற்குரிய நாணய தாள்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment