புதிய கிரகம் ஒன்று கண்டு பிடிப்பு - அமெரிக்க யாலே பல்கலைக்கழகம்
நான்கு சூரியன்களுடன் இருக்கும் புதிய கிரகம் ஒன்றை சர்வதேச வானியலா ளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், இவ் வாறான அரிதான கிரகம் ஒன்று கண்டு பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது.
பூமியில் இருந்து 5000 ஒளியாண்டு களுக்கு அப்பால் இருக்கும் இந்த கிரகத்திற்கு பி.எச் 1 என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யாலே பல்கலைக் கழகத்தின் புதிய கிரகங்களை தேடும் திட்டத்தின் கீழ் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பி.எச் 1 கிரகம் இரு சூரியன்களை சுற்றி வருவதோடு அதனை ஒட்டியதாக தொலை தூரத்தில் மேலும் இரு நட் சத்திரங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் இந்த கிரகத்திற்கு நான்கு சூரியன்களின தும் ஒளி கிடைக்கப்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களில் 6 கிரகங்களே இரு சூரியன்களை சுற்றி வருகின்றன. ஆனால் அதன் தொலைவில் இருக்கு மேலும் இரு நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
யாலே பல்கலைக்கழக வானியலாளர்களால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த கிரகம் ஹவாயில் இருக்கும் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு அறிக்கையையாலே பல்கலைக்கழகத்தின் மெக்ஸ்குவம்ப், நவடாவில் நேற்று முன்தினம் நடந்த அமெரிக்க வானியலாளர் குழு கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
பி.எச் 1 கிரகம் வாயுவால் சூழ்ந்த பூமியை விடவும் 6.2 மடங்கு பெரிதானதாகும். அதேபோன்று இந்த கிரகம் சுற்றி வரும் இரட்டை நட்சத்திரங்களும் எமது சூரியனை விடவும் முறையே 1.5 மற்றும் 0.41 மடங்கு பெரிதாகும். இந்த கிரகம் தனது சூரியன்களை தொடர்ச்சியான 138 நாட்களில் சுற்றி வருகின்றது.
இதில் பி.எச் 1 கிரகத்திற்கு தொலைவில் இருக்கும் இரட்டை நட்சத்திரங்கள், பூமியில் இருந்து சூரியனுக்கு இருக்கும் தொலைவில் இருந்து 1000 மடங்கு இடைவெளியில் குறித்த கிரகம் காணப்படுகிறது.
0 comments :
Post a Comment