இரு இளைஞர்களின் உயிரை காவுகொண்ட ரயில்
காலி ஹபராதுவில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக ஹபராது பொலிஸார் தெரிவித்துள் ளனர். ரயில் கடவையை மோட்டார் சைக்கிள் கடக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த சம்பத் குமார மற்றும் நிஷாந்த ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹபராது பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
0 comments :
Post a Comment