Thursday, October 18, 2012

மஞ்சுளா மீதான தாக்குதல் : 6 லட்சம் தொலைபேசி அழைப்புக்களை சோதிக்கப்போகுதாம் பொலிஸ்

நீதிச்சேவை ஆணையத்தின் செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் தகவல் பெறும் முயற்சியாக பொலிஸ் நிதியில் இருந்து பரிசுப் பணம் வழங்கவேண்டும என்று சட்டத்தரணிகள் சங்கம் கல்கிசை பிரதான நீதவான் நிரோசா பெர்ணான்டோ முன்னிலையில் கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு ஆலோகனை வழங்கியது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 இலட்சத்துக்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை பரிசீலனை பண்ணவிருப்பதாக உதவிப் பொலிஸ் அதிகாரி தர்மதாச த்திராஜா கூறினார்.

இந்த தாகுதல் விடயம் பி அறிக்கையோடு மட்டும் நின்று விடக்கூடாது என்று சடத்தரணிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான ரஞ்சன் தகநாயக்கா கூறினார். வரும் 31 ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதவான் பொலிசாருக்கு கட்டளையிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com