மாணவனுடன் செக்ஸ் : ஆசிரியைக்கு சிறை
சிங்கப்பூர் : தன்னிடம் படித்த மாணவனுடன், செக்ஸ் உறவு கொண்ட, ஆசிரியைக்கு, சிங்கப்பூரில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த, 32 வயது ஆசிரியை, தன்னிடம் படித்த, 15 வயது மாணவனுக்கு, அன்பளிப்பு போன்றவற்றை கொடுத்து,
உறவை ஏற்படுத்தி கொண்டார்.
இந்த ஆசிரியைக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், இந்த மாணவனை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து உடலுறவு கொண்டுள்ளார். இந்த விஷயத்தை கண்டு பிடித்த, மாணவனின் பெற்றோர், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறினர்.
இதையடுத்து, ஆசிரியை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியைக்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.
சிங்கப்பூர் சட்டப்படி, 16 வயதுக்குட்பட்டோரிடம், உடலுறவு கொள்பவர்களுக்கு, 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் அளிக்கப்படும். ஆசிரியைக்கு மிக குறைந்த தண்டனை அளித்துள்ளதாக, இணைய தளத்தில், சிலர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment