ஹெரோயின் வைத்திருந்த பெண்ணுக்கு மரண தண்டனை
ஹெரோயின் வைத்திருந்த குற்றத்தி ற்காக பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
2002ஆம் ஆண்டு தொடக்கம் இவ் வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்ற வந்த நிலையில் இன்று இறுதி விசாரணைகள் நடைபெற்ற போது குறித்த பெண் தன்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதன் காரணமாக கொழும்பு மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
0 comments :
Post a Comment