வதந்திகளை நம்பவேண்டாம்! நிதியுதவிகள் நிறுத்தப்படவில்லை - கெஹெலிய
ஜனாதிபதி நிதியத்திலிருந்து நோயா ளர்களின் சத்திரசிகிச்சைக்காக வழங் கப்படும் நிதியுதவிகள் நிறுத்தப்பட வில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிதியத்திலிருந்து நோயா ளர்களின் சத்திரசிகிச்சைக்கு வழங்க ப்படும் நிதியுதவிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலர் அடிப்படையற்ற செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
அவை முற்றிலும் போலியான தகவல்களாகும் என்றும், ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் நிதியுதவிகளை நிறுத்த அரசாங்கம் எவ்விதத்திலும் செயற்படப் போவ தில்லை என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் இலாபங்களுக்காகவே இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்த வெர் குறிப்பிட் டுள்ளார். குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே ஜனாதிபதி நிதியத்தின் பிரதான செயற்பாடாகுமென கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment