சவூதியில் இலக்கையர் ஒருவர் பலி! மற்றொருவர் கோமா நிலையில்!
சவூதிக்கு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சென்றிருந்த இலங்கை பயணி ஒருவர் சவூதியில் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொரு ஹஜ் பயணி கோமா நிலையில் இருப்பதாகவும் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார்.
கோமா நிலையில் உள்ள ஹஜ் பயணி தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், இலங்கை ஹஜ் பயணிகளுக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மக்காவில் ஆரம்பமான உலக முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவூதி சென்றுள்ள ஹஜ் குழுவின் இணைத்தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம். பௌஸி மக்காவிலிருந்து மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment