தொலைகாட்சி நாடக இயக்குநர் மஹரகமவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலி
மஹரகம நாவின்ன பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் இடம்பெற்ற வாகன விபத்தில் தொலைகாட்சி நாடக இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிழந்தவர் தனியார் தொலைகாட்சி நாடக தயாரிப்பாளராக கடமையாற்றிய நாலக்க வெதமுல்ல என தெரியவந்துள்ளது.
அத்துடன், அச்சம்பவத்தில் காயமடைந்த தேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment