Saturday, October 6, 2012

கடன் அட்டை பயன்பாடா? மிகவும் அவதானம் - பொலிஸார்

கடன் அட்டைகளை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்கு மாறு, கடன் அட்டை பாவனையாள ர்களை பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண கோட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடனட்டை பயன்பாடு அதிகரித்துள்ள அதேவேளை, கடனட்டை மோசடிகளும் அதிகரித்துள்ளன. இன் நிலையில் கடனட்டை மோசடிகளை தவிர்த்துக் கொள்வதில் முக்கிய அவதானம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடன்அட்டைகளை பொருள் கொள்வனவின் போது அல்லது கட்டணங்களை செலுத்த பயன்படுத்தும் போது, அது ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரங்களில் செலுத்தப்படுகின்றதா என்பதில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், கட்டண பட்டியலையும், கடனட்டையில் கட்டணம் செலுத்தியதன் பின்னர் வழங்கப்படும் பட்டியலையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடனட்டை குறித்த தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று தெரிவித்த அவர், உணவு விடுதிகள் போன்றவற்றில் கடனட்டையை பயன்படுத்தும் போது, அது மீண்டும் உரிமையாளரின் கைகளுக்கு கிடைக்க நேர தாமதம் ஏற்படுமாக இருந்தால், அது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் எனவும், மாதாமாதம் குறித்த வங்கியுடன் தொடர்பு கொண்டு கடனட்டை பயன்பாட்டு செயற்பாடுகளை மீள்பரிசீலினை செய்துக் கொள்வது கடனட்டை மோசடிகளில் இருந்து தப்பிக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com