மூன்று மாத இளம்பிஞ்சுக் குழந்தைக்கு தாய்பாலுடன் கஞ்சா கொடுத்த தாய் கைது
நியூசியாந்தில் மூன்று மாத குழந்தை ஒன்றுக்கு தாய்ப்பாலில் கலந்து கஞ்சா கொடுத்ததாக தாய் ஒருவர் நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
நியூசிலாந்தில் இப்படி ஒரு விஷயம் நீதிமன்றம் வந்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
18 வயதுக்கும் குறைவான வயதுடைய ஒரு நபருக்கு தெரிந்தே போதை மருந்து கொடுத்தார் என்ற குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதன்போது 29 வயதாகும் தாய், நீதிமன்றத்தில் தனது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இத்தாய் ஆறு மாத காலம் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்று வான்கானுய் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒருவர் போதை மருந்துக்கு அடிமையாகும்போது அவரும் பாதிக்கப்படுகிறார் அவரைச் சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையே இந்த விவகாரம் காட்டுகிறது என்றும், இந்த தாய்க்கும் பிள்ளைக்கும் உதவியும் ஆதரவும் தேவைப்படுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போதை மருந்துக்கு அடிமையாகியுள்ள இந்த தாய்க்கும் அவரது பிள்ளைக்கும் உதவியும் கண்காணிப்பும் தேவை என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
0 comments :
Post a Comment