கே.பி. மீது குற்றம் சுமத்த ஆதாரமில்லை! சிரிப்புக் கிடமான விடயமாம்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சந்தேக நபராக இந்தியாவினால் தேடப்பட்டு வருப வரும், இன்டர்போலால் தேடப்பட்ட குற்றவாளியாக அறிக்கப்பட்டவரும், 30 ஆண்டு காலத்தில் ஆயிரக்கணக்காக பொது மக்கள் மற்றும் பொலிசார் படுகொலை செய்யப்படுவதற்குப் புலிகளுக்கு உதவியவருமான கே. பி. எனப்படும் குமரன் பத்மநாதன் மீது, குற்றம் சுமத்துவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்று தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பணிப்பாளர் லக்ஸ்மன் உலுகல்லை கூறியிருப்பது சிரிப்புக் கிடமானது என்று ஐ.தே.கவின் துணைப் பொதுச் செயலாளர் டாக். ஜயலத் ஜயவர்தனா தெரிவித்துள்ளார்.
புதிய இடதுசாரி முன்னணி தலைவர் டாக். விக்கிரமபாகு கருணரட்ன, ஜனநாயக மக்கள் முன்னணி துணைத் தலைவர் டாக். ந. குமரகுருபரன், புதிய சிகல உருமய தலைவர் சரத் மனமேந்திரா, ருகுணு மக்கள் கட்சி அருண சொய்சா முதலானோர் இந்த கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேநேரம் கே.பி. யின் விடயம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப போவதாக ஐ.தே.க பா.உ. ரவி கருணாநாயக்கா கூறியுள்ளார். 2009 ல் கே.பி. பிடிக்கப்பட்ட போது அவரை விசாரித்து வருவதாகவும், விரைவில் அது பற்றிய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும், அமைச்சர் தினேஷ் குணவார்தனா உறுதி அளித்திருந்தார் என்று அவர் கூறியுள்ளார்.
1 comments :
Yes ..,yes..,there is an English proverb, it says..King do no wrong.
Post a Comment