Tuesday, October 30, 2012

விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது இரண்டு பைலட்டுகள் தூங்கியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது

இத்தகவலை வெளியிட்ட பிரிட்டன் விமானப் போக்குவரத்துத் துறை, சம்பந்தப்பட்ட விமானம் வானில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாகவும் அப்போது அதை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பைலட்களும் தூக்கத்தில் ஆழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளது. அவர்களது சக பைலட்டுகள், கேபினில் இல்லை என்றும் கூறியுள்ளது. எனினும், அந்த விமான நிறுவனத்தின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் விமான பைலட்கள் சங்கம் கூறுகையில் இது வழக்கமாக நடப்பதுதான் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கலந்து கொண்ட பைலட்களில் 43 சதவீதம் பேர் விமானம் பறக்கும்போது தூங்குவதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைப்படி சமர்ப்பிக்கப்பட்ட மனு மூலம், குறிப்பிட்ட ஒரு விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் கேப்டன் கழிப்பறை செல்வதற்காக பைலட் அறையை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.

இத்தகவல்கள் பிரிட்டன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com