மண்டையோட்டை வீட்டின் முற்றத்தில் வைத்து அச்சுறுத்த முயற்சித்த இளைஞன்
மயானம் ஒன்றிலிருந்து மண்டையோடு ஒன்றை எடுத்து வந்து, அக்கரைப்பற்று ஆலையடி கோபால் வீதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் குறித்த மண்டையோட்டை வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டையோட்டை குறித்த வீட்டின் முற்றத்தில் வைத்த இளைஞன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் மண்டையோடு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment