இலங்கைப் படையினருடன் இணைந்து பயிற்சி செய்வதில் அமெரிக்காவுக்கும் பெரு மகிழ்சியாம்.
இலங்கை கரையோர காவற்படையினருடன் இணைந்து பயிற்சிகளை நடத்துவதையிட்டு மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிசேல் ஜே. சிஸன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற ஏற்றுமதிக்கட்டுப்பாடு மற்றும் எல்லைப்பாதுகாப்பு தொடர்பான நிகழ்சசித்திட்டத்தின் இறுதி வைபவத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.
இந்த முயற்சியானது கடற்பாதுகாப்பை முன்னேற்றுகின்ற இருதரப்பு செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் விருத்தி செய்யப்பட்டது. 04 அமெரிக்க இராணுவ பயிற்றுவிப்பாளர்களும் இலங்கையைச் சேர்ந்த 14 கரையோர பாதுகாப்பு படை அதிகாரிகளும் 10 தேர்ந்ததெடுக்கப்பட்ட பயிலுநர்களும் இதில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சித்திட்டமானது ஏனைய நாடுகள் தமது ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு முறைமைகளை விருத்தி செய்து கொள்ள உதவுவதை நோக்காகக் கொண்டு அமெரிக்க அரசாங்கதினால் முன் எடுக்கப்படுகின்ற பிரதான முயற்சியாகும்.´
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், உள்நாட்டுப்பாதுகாப்பு, வர்த்தகம், சக்திவளம் மற்றும் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் நிபுணத்துவதின் ஊடாக உலகம் எங்கும் உள்ள நாடுகளுக்கு சட்டம் அமுலாக்கள் பயிற்சிகள் மற்றும் உபகரணங்களை இத்திட்டம் வழங்குகின்றது..
2012ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதி இந்தப் பயிற்சிச் செயற்பாடுகள் ஆரம்பமாகியதுடன் இலங்கையில் கரையோர காவற்படையினருக்காக நடத்தப்பட்ட முதலாவது அலுவலர் பாடநெறியாகவும் அமைந்தது.
ஏனையவர்களுக்கு கடல் எல்லைப்பாதுகாப்பு சட்டத்தை எவ்வாறு செயற்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துவது என மாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்காக இந்தப்பயிற்சிநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment