பாம்பைக் கேட்டு உயர்நி மன்றத்தில் வழக்கு.
தன்னிடமிருந்த நாகபாம்பைப் பறித்து தெகிவளை மிருகக் காட்சி சாலையில் கையளித்தது தனது அடிப்படை உரிமையை மீறிய செயலாகும் என்றும் அதனைத் தனக்குத் திருப்பித் தர வேண்டும் என்று கோரி பாம்பு நடனக்காரியான நிரோசா விமலரத்ன உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு வரும் மார்ச்சு மாதம் 8ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நீதிபதி நிமல் காமினி அமரதுங்க தலைமைலான மூன்று நீதிபதிகள் குழுந்த வழக்கை விசாரிக்கின்றது. பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment