மூன்று மாதங்களின் பின்னர் மீளத் திறக்கப்படுகின்றது யாழ்ப்பாண பல்கலைக் கழகம்.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் விவசாய மற்றும் முகாமைத்துவ துறை மாணவர்களை இன்றுமுதல் விரிவுரைகளுக்குச் சமுகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக துணை வேந்தர் பேரா.வசந்தி அரசரட்னம் தெரிவித்து ள்ளார்.
அதேவேளை, மூன்று மாதங்களின் பின்னர் பல்கலைக் கழகம் திறக்கப்பட்ட நாளான நேற்றுமுன்தினம் கலைத் துறை மாணவர்கள் விரிவுரைகளுக்குச் சமுகமளித்தனர் என்றும், மற்ற துறைகளைத் திறப்பதற்கான திகதிகளைத் தீர்மானிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக் கழக மூதவை நேற்று கூடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அறிவியல் துறை மாணவர்களை 22 ம் திகதி விரிவுரைகளுக்கு வருமாறு கேட்டிருப்பதாக தெரிகின்றது. யாழ். பல்கலைக் கழக தலைமைப் பதிவாளர் திரு வி.காண்டீபன் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்ள கொழும்பு சென்று விட்டதால் வேறு தகவல்களைப் பெற முடியவில்லை.
0 comments :
Post a Comment