Friday, October 12, 2012

"பெரிய அதிகாரிகளின் வெற்றுக் கதிரைகள்". மற்றவர்கள் சல்லாபம்.

பெரிய அதிகாரிகள் கதிரைகளில் இல்லை, மற்றவர்கள் விடுப்பு அளக்கிறார்கள், இன்னும் சிலர் தொலைபேசியில் தொங்கிக் கொண் டிருக்கிறார்கள், பொதுமக்களோ அலைக்கழிக்கப்படுகிறார்கள், பொது மக்களுக்கு சேவை செய்யும் இலட்சணம் இதுதானா? என மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவை கண்டி புதிய செயலகத்தில் உள்ள ஊழியர்களைக் கடிந்து கொண்டுள்ளார்.

திடீரென்று கண்டி புதிய செயலகத்துக்கும், பல அரசாங்க நிறுனங்களுக்கும், மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவை சென்றபோது, கண்டி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் பணிப்பளர், பிரதிப் பணிப்பாளர், மற்றும் நிதிப் பணிப்பாளர் ஆகிய மூவருமே அலுவலகத்தில் இல்லாததையடுத்தே அவ்வாறு அங்கிருந்த ஊழியர்களைக் ஆளுனர் இவ்வாறு கடிந்து கொண்டார்.

காணிப் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்ற அங்கு நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த உறுதிகள வைக்கப்பட்டுள்ள ஆவணக் காப்பகத்தை ஆராய்ந்தார். மழை நாட்களில் அங்கு ஒழுகும் மழை நீரால் அந்த பெறுமதியான ஆவணங்கள் நாசமாகும் நிலைக்கு ஆளாகின்றன என்று மத்திய மாகாண உதவி பாதிவாளர் நாயக்க்கம் எம். எஸ். உபாலி சுட்டிகாட்டினார்.

கண்டி மாவட்ட சுகாதாரசேவைப் பணிப்பாளரின் அலுவலகம், காணிச் சீர்திருத்த அதிகாரசபை, அளவையாளர் திகைகளம், காணிப் பதிவாளர் அலுவலகம் போன்ற அலுவலகங்கள் ஆளுனரின் கண்காணிப்புக்கு உள்ளாகியதாக தெரிவிக் கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com