திலகரட்னவின் உள்வந்த வெளிச்சென்ற அழைப்புகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க
கல்கிசையில தாக்குதலுக்கு இலக்கான நீதிச் சேவை ஆணைக்குழுவின் செய லாளர் மஞ்சுள திலகரட்னவின் கைய டக்க தொலைபேசிக்கு கிடைக்கப்பெற்ற உள்வந்த, வெளிச்சென்ற அழைப்புகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பி க்குமாறு நீதிமன்றத்தினால், தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் செயலாளர், தாக்கப்பட்டமை தொடர்பாக சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நாளை மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் தரவுகளை நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இனந்தெரியாதோரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் சிகிச்சைகளின் பின்; மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாக அதன் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment