அவதானம்! அவதானம்!
நாடெங்கும் பல பிரதேசங்களில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து, தாழ். நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இடைக்கால பருவப்பெயர்ச்சி காலநிலையை தொடர்ந்து, நாட்டின் பல பிரதேசங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. பல தாழ் நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அனர்தத முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பல இடங்களில் மலைகள் சரிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பலத்த மழையுடன் இடி, மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென்றும், வளிமண்டலவியல் ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலையகம் உள்ளிட்ட நீரேந்து பிரதேசங்களுக்கு போதியளவு மழை கிடைத்து வருவதனால், நீரேந்து பிரதேசங்களும் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளது.
கண்டி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் விடுக்கப்பட்டிருந்த அனர்த்த எச்சரிக்கை, எதிர்வரும் மணித்தியாலங்களுக்கும் அமுலில் இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பலத்த மழையினால், அத்தனகல்ல பிரதேசத்தில் மண்சரிவினால் வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment