யுத்தத்தின் போது தனது பார்வையை இழந்த ராணுவ வீரர் திருமண வாழ்வில் இணைந்து கொண்டார்
இறுதிக்கட்ட யுத்த்த்தின் போது தனது பார்வையை இழந்த லான்ஸ் கோப்ரல் அன்ஜனா கருனஸ்ரீ கடந்த வெள்ளிக் கிழமை ரத்நாயகபுரத்தைச் சேர்ந்த நிரேஷா டுலக்ஷியை கரம்பிடித்து திருமண வாழ்வில் இணைந்து கொண்டார்.
இராணுவத் தளபதி உட்பட இராணுவ அதிகாரிகள், சக படை வீரர்கள், மற்றும் நலன் விரும்பிகள் போன்றோர் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் அன்ஜனா கருனஸ்ரீ யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது 2009 மார்ச் 14 ஆம் திகதி மோட்டார் தாக்குதல் ஒன்றின் போது தனது இருகண்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment