ஹஜ்ஜூப் பெருநாளையிட்டு புத்தளத்தில் இரத்த தானம்
புனித ஹஜ்ஜூப் பெருநாளையிட்டு புத்தளம் ஹியுமன்ட் டிவலப்மன்ட் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரத்த தான
நிகழ்ச்சி இன்று திங்கட்கிழைமை புத்தளம் ஜ.பி.எம்.மண்டபத்தில் இடம் பெற்றது.இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்று இரத்தத்தை தியாகம் செய்தனர்.
இற்றைக்கு 500 வருடங்களுக்கு முன்னர் இறைத்துாதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் இடம் பெற்ற தியாகங்களை நினைவு கூர்ந்து உலகின் பல பாகங்களில் இருந்து சென்ற முஸ்லிம்கள் புனித மக்காவில் ஒன்று கூடி இருக்கும் இந்த வேளையில் புத்தளம் முஸ்லிம்கள் தமது உதிரத்தை தியாகம் செய்யும் உயர் பணியில் ஈடுபட்டுள்ளமை நினைவுபடுத்தத்தக்கது என அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.எம்.நமாஸ் தெரிவித்தார்
புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -
0 comments :
Post a Comment