கந்தளாயில் மீன் மழை
கந்தளாய் பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கந்தளாய் விளையாட்டு மைதானத்தில் இந்த சிறிய மீன்களை காணக் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு மாத நீண்ட வரட்சியின் பின்னர் நேற்று கந்தளாய் பிரதேசத்தில் கன மழை பெய்தது.
இதன் போது மழை நீருடன் தரையில் சிறிய மின்களும் விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் லீலரட்ன விளையாட்டரங்கில் சுமார் 3-4 அங்குல அளவுடைய மீன்கள் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மழையுடன் தரையில் விழுந்த மீன்கள் குளத்து மீன் வகையினைச் சார்ந்தவை எனக் குறிப்பிடப்படுகிறது.
0 comments :
Post a Comment