இலங்கைச் சிறைச்சாலைகளை குறை கூறுகின்றது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கையில் உள்ள சிறைச்சாலை களில் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான இடவசதிகள் இல்லை என்றும், இலங்கையிலுள்ள சிறைச்சா லைகள் சர்வதேச தரத்திற்கு அமைய பராமரிக்கப்படுவதில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி மஹானாமஹேவா குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் உள்ள சிறைகளில் நான்கில் ஒரு பகுதியினருக்கான இடவசதி மாத்திரமே சிறைச்சாலைகளில் காணப்படுகின்றது என மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர கருத்து தெரிவிக்கையில், சிறைச்சாலைகளிலுள்ள பழைய கட்டடங்களை புதுப்பிக்கவும், சிறைச்சாலைகளை வசதிகளுடன் கூடிய பகுதிகளுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இன்நடவடிக்கை பூர்த்தியாக நீண்டகாலம் தேவைப்படும் எனவும், சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்படும் கைதிகளை மீண்டும் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காவதை தடுக்கும் வகையில் சிறைச்சாலைகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம் எனவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment