அரச உயர் அதிகாரியின் வாகனத்தில் கஞ்சா! வாகன சாரதி பொலிஸாரினால் கைது
அரச உயர் அதிகாரி ஒருவரின் வாகன த்தில் இருந்து 50கிலோ கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளதுடன், குறித்த வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
அரசாங்கத்தின் முகாமைத்துவ துறையில் முக்கிய பதவி வகிக்கும் அதிகாரியின் வாகனம் வேகமாக சென்ற போது, அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட வேகமாக பறந்து செல்வதைப் பார்த்த பொலிஸார், அதனை நிறுத்தி வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது அவ்வாகனத்தில் இருந்து 50கிலோ எடையுடைய கஞ்சா போதைப் பொருளைப் பொலிஸார் மீட்டுள்ளதுடன், வாகன சாரதியை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தில் சம்பந்தப்பட்ட உயர் அரச அதிகாரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் உயர் அதிகாரிகளின் வாகனங்கள் நிறுத்தப்படாது என்ற தைரியத்தில் அவற்றில் ஒரு சில வாகன ஓட்டிகள் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அவ்வாறே நோய்வாய்ப்பட்டிருக்கும் நோயாளிகளை ஆஸ்பத்திரிகளுக்கு விரைவாக எடுத்துச் செல்லும் அம்புலன்ஸ் வண்டிகளின் சாரதிகள் இவ்விதம் தங்கள் உத்தியோகபூர்வ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டு நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டும் உள்ளார்கள். ஒரு அம்புலன்ஸ் சாரதி தனது வாகனத்தில் 250 லீற்றர் கசிப்பு என்ற சட்ட விரோத மதுபானத்தை ஏற்றிச் சென்ற போது பொலிஸாரிடம் அகப்பட்டு தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment