கிணறுகளுக்கு வரியா? ஆப்படி ஒரு தீர்மானமும் இல்லை - தினேஷ்
எமது அரசாங்கம் கிணறுகளுக்கு வரி அறவிடுவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என ஆளும் கட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று சபையில் தெரிவித் துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் தினேஷ் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிணறுகளுக்கு வரி அறவீடு செய்தல் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள வில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீர்வழங்கல் வடிகாலமைப்புத் துறை அமைச்சர் என்ற வகையில் நானோ இல்லை நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவோ அல்லது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையோ இவ்வாறு கிணறுகள் வெட்டுவதற்கு வரி அறவிடுவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அமைச்சரவையிலும் அத்தகைய தீர்மானம் இல்லை. யாரோ அதிகாரியொருவர் இத்தகைய தகவலை வெளியிட்டிருக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment