இவர்தான் தாக்குதலை மேற்கொண்டவர்
நீதிச்சேவை ஆணைக் குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரின் மாதிரி உருவப் படத்தை ஒத்த உருவப் படத்தை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த மாதிரி உருவத்தைக் கொண்ட சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு குற்றத்தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேல்மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - 0777755950, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு- 0717774400, 0112662323, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அத்தியட்சகர் - 0777661137, 0112662322, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அலுவலக அதிகாரி -0714060906, 0112662311.
0 comments :
Post a Comment