பிள்ளைகளின் மறு பிறப்பாக நினைத்து மூன்று மிருகங்களை அன்போடு வளர்க்கும் மூதாட்டி
பொலன்னறுவை மாவட்டத்தில், ஒரு பின்தங்கிய கிராமத்தில் தயாவதி என்ற வயோதிப மாது வாழ்ந்து வந்தாள். அவருக்கு 3 மகன்மார் இருந்தார்கள்.
ஒரு மகன் 3 ஆண்டுகளுக்கு முன்னர் விஷப் பாம்பு தீண்டி மரணமானார். இதனால் வேதனை அடைந்த அந்தப் பெண் 3 மாத அன்னதானத்தை தனது மகனுக்காக கொடுத்து அழுது கொண்டு இருந்த போது அவ் வீட்டின் வாசலில் ஒரு குரங்குக்குட்டி படுத்திருப்பதை பார்த்தாள். பார்த்த உடனேயே அந்த குரங்கு குட்டியின் மீது அதிக ஆசையும், அன்பும் ஏற்பட்டது. பின்னர் அவள் குரங்குக்குட்டிக்கு பாலுட்டி அன்போடு வீட்டில் வைத்து வளர்த்தாள்.
இது தன்னுடைய மூத்த மகனின் மறு பிறவி தான் என்று நம்பினாள்.
இவ்வாறு இருக்கும் போது ஒரு வருட காலத்தின் பின்னர் 2வது மகனும் யானை அடித்து மரணித்தார்.
அவனுக்கும் அதே விதமாக அந்தப் பெண் கஷ்டப்பட்டு 3 மாத அன்னதானம் கொடுத்தாள். அன்று மாலை அந்த வீட்டுக்கு எதிராக ஒரு முள்ளம்பன்றிக் குட்டி படுத்திருந்தது.
அது தன்னுடைய 2 வது மகன் என்று நினைத்து அவள் அதனையும் தூக்கி அன்போடு வளர்த்தாள், தன்னுடைய 2வது மகனின் மறுபிறப்புத்தான் இந்த முள்ளம்பன்றி என்று நினைத்தாள்.
சில காலத்துக்குப் பின்னர் 3வது மகனும் டெங்கு நோய் வந்து மரணித்தான்.
அவனது மரணத்தையும் அடுத்து 3மாத அன்னதானம் கொடுக்கப்பட்ட தினத்தில் ஒரு மரநாய்க்குட்டி வீட்டு வாசலில் இருந்தது.
அது தனது 3வது மகனின் மறு பிறவி என்று தன்னோடு சேர்த்து வளர்த்து வந்தாள்.
இப்போது குரங்குக் குட்டிக்கு 6 வயதாகவும், முள்ளம் பன்றிக்கு 4 வயதாகவும், மரநாய்க்கு 2 வயதாகவும் இருப்பதால் பெருமையோடு இதுபற்றி சொல்லும் இந்த வயோதிய மூதாட்டி, இவை தான் என் 3 மகன்களின் மறுபிறப்புக்கள் என்று வளர்த்து வருகிறாள்.
இவற்றிற்கு உணவை பெற்றுக்கொடுப்பதற்காக காட்டுக்கு சென்று விறகு வெட்டியும் விளாம்பழம் போன்றவற்றை விற்றும் பணம் சம்பாதிக்கிறாள்.
இந்த 3 மிருகங்களும் மூதாட்டியுடன் அன்பாக வீட்டிலேயே இருக்கின்றன.
இதனைப் பார்க்கும் கிராமத்து மக்கள் மறுபிறவி என்று ஒன்று இருப்பது உண்மைதான் என்று கூறுகிறார்கள்.
0 comments :
Post a Comment